அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்த செயல்பாட்டு அறிக்கையை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

Published Date: February 24, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்த செயல்பாட்டு அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

மதுரை மத்திய தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி அரச திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செயல்பாட்டு அறிக்கை தயாரித்து அதை தொகுதி மக்களுக்கு வழங்குவதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதன்படி தனது 17வது செயல்பாட்டு அறிக்கையை அமெரிக்க மிஷன் சர்ச் தெரு பகுதி குடியிருப்பு வாசிகள், வணிகர்கள், பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக், பகுதி செயலாளர்கள் சு.பா.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Media: Dinamani